எண்ணப்பின்னல்கள்

நண்பரே! எமது எண்ணப்பின்னல்களுக்கு தங்களை வரவேற்கிறேன். திருக்குறள் (Thirukural) விஷயங்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் - நித்தில்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Monday, August 08, 2005

பொய்மையும் வாய்மையிடத்த

இது எனக்கு செவிவழி வந்த உண்மைக்கதை. இந்தக்கதை எங்காகிலும் பிரசுரிக்கப்பட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனாலும் என்னால் இதனைப் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை. ஒரு கட்சித்தலைவர், ஆரம்பகாலகட்டத்தில், தன்னுடைய கட்சிப்பணிக்காக ஒரு கிராமத்திற்கு சென்றிருந்தார். சிறிய அழகான கிராமம். அக்கிராமத்தின் எல்லையோரப் பகுதியில் ஒரு சிறிய கோயிலும் மண்டபமும் இருந்தது. அருகினில் ஒரு பெரிய மரம் இருந்தது. அந்த மரத்தில் ஒரு பேய் இருப்பதாகவும் அது இரவு நேரத்தில் எவரேனும் அப்பகுதியில் நடமாடிக்கொண்டிருந்தால் அவரை அடித்து விடுவதாகவும், இரத்தம் கக்கி இறந்து விடுவதாகவும் மக்களிடையே பேச்சு இருந்து வந்தது. இந்த கட்சிக்காரர் பேய் பிசாசு எல்லாம் ஒன்றும் இல்லை அது எல்லாம் கட்டுக்கதை என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.

இப்படியாக அவர் ஊர் மக்கள் சிலரிடம் பேசிக்கொண்டு இருந்த பொழுது அவர்கள் அவரிடம் பந்தயம் கட்டத் தயாரானார்கள். ஒரு நாள் இரவு பொழுது அவரால் அந்த பேய்மரத்தில் தங்கியிருந்து அடுத்த நாள் உயிருடன் திரும்பி வரமுடியுமானால் அவர்கள் பேய் இருப்பதை நம்ப மறுப்பதோடு ஒரு தொகையினையும் பந்தயமாக வைத்தார்கள். இந்த சிலருக்கு மட்டுமே தெரிந்த பந்தயத்தை ஏற்றுக்கொண்டு கட்சிக்காரர் அன்று முன்னிரவே அந்த மரத்தில் ஏறி ஒளிந்து கொண்டார். எறும்புக்கடிகளுக்கும், சிறு சிறு பூச்சிகளின் தொந்தரவுதளுக்குமிடையில் தூங்காமல் விழித்துக் கவனித்திருந்தார்.

எந்தச் சலனமும் இல்லாமல் நேரம் நகர்ந்துகொண்டிருந்தது. நள்ளிரவு தாண்டியிருந்த சமயத்தில், சர சரவென்ற சத்தம் வந்தது. தூரத்தில் வெள்ளை நிறத்தில் ஒரு உருவம் நகர்ந்தது தெரிந்தது. இவருக்கு இதயத்துடிப்பு அதிகரிகக அரம்பித்தது. இவர் நன்றாக மரத்தைக்கட்டிப் பிடித்துக்கொண்டு கவனிக்க ஆரம்பித்தார். மெதுவாக மரத்தினை நோக்கி வந்த அந்த உருவம் சிறிது விலகி அங்கிருந்த மண்டபத்தினை நோக்கிச் சென்றது. இப்படிக் கவனித்துக்கொண்டு இருந்த நேரத்தில் மற்றொரு திசையிலிருந்த ஏதோ நகருகின்ற ஓசைக் கேட்டது. அங்கிருந்தும் ஒரு பெரிய உருவம் மரத்தினை நோக்கி நகர்ந்து சென்றது. மண்டபத்தின் முன்பகுதியில் அந்த வெள்ளை உருவம் சிறிது நேரம் நின்றது. இன்னொரு உருவமும் மண்டபத்தின் முன்பகுதியை நெருங்கும்போது, அந்த உருவங்களின் அடையாளம் இவருக்குத் தெரியவாரம்பித்தது. பின்னர், அவ்விரு உருவமும் மண்டபத்தினுள்ளே சென்று மறைந்தது. வெள்ளையுருவம் அக்கிராமத்தில் மேல்சாதியினைச் சேர்ந்த ஒரு விதவைப்பெண். இன்னொரு உருவம் அதே கிராமத்தை சேர்ந்த கீழ்சாதி இளைஞன்.

சிறிது நேரத்தில் அவர் மெதுவாக மரத்திலிருந்து கிழிறங்கி அமைதியாக ஊருக்குள் சென்று அவர் அறையில் படுத்துக்கொண்டார். காலைப் பொழுது புலர்ந்தது. பந்தயம் கட்டிய நண்பர்கள் வந்தார்கள். என்ன நடந்தது என்று கேட்டார்கள். அதற்கு அக்கட்சிக்காரர் சொன்னார், 'எனக்கு பயமாக இருந்த்தால் நான் இரவு அம்மரத்தில் தங்கவில்லை" என்று.

ஏன் அப்படிச் சொன்னார்?



பகி்ர்வேன்...
-நித்தில்

0 Comments:

Post a Comment

<< Home