எண்ணப்பின்னல்கள்

நண்பரே! எமது எண்ணப்பின்னல்களுக்கு தங்களை வரவேற்கிறேன். திருக்குறள் (Thirukural) விஷயங்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் - நித்தில்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Friday, August 12, 2005

வீடியோ கேம், டீவி நல்லதா?

இன்று மதிய உணவு இடைவேளையில் பக்கத்தில் வாஷிங்டன் யூனியன் ஸ்§டஷனில் உள்ள புத்தகக்கடைக்குச் சென்றேன். அங்கே ஸ்டீபன் ஜான்சன்(Steven Johnson) என்பவர் எழுதியிருந்த "எவ்ரிதிங் பேட் இஸ் குட் ஃபார் யு"(Everything Bad Is Good for You) என்ற புத்தகத்தைப் பார்த்தேன். சில நிமிடங்கள் புரட்டினேன். அப்பொழுது பார்த்த விஷயங்கள் மற்றும் எனக்குத் தோன்றிய எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.


இந்த காலத்தில் கெடுதல் என்று சித்தரிக்கப்படும் பல விஷயங்கள் (எடுத்துக்காட்டாக, வீடியோ கேம், டீவி, டிவிடி, சினிமா) ஆகியன இப்போதைய தலைமுறைக்கு அறிவு வளர உதவுகின்றனவா?


வீடியோ கேம்:
வீடியோ கேம் குழந்தைகளின் படிப்பைப் பாதிக்கின்றது. அவர்கள் அறிவை வளராமல் செய்கிறது. புத்தகம் படிக்கும் பழக்கத்தைக் குறைக்கிறது. மொத்தத்தில் வீடியோ கேம் நல்லதல்ல என்று ஒரு சாரார் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

இன்றைய செய்தி ஒன்றில், ¦தன்கொரியாவைச் சேர்ந்த லீ என்னும் 28 வயது இளைஞர் தொடர்ந்து 49 மணி நேரம் ஊண் உறக்கம் இல்லாமல் விடாமல் விளையாடி மயங்கி விழுந்துள்ளார். அவரை அந்த வீடியோ கேம் கடையில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். மருத்துவமனையில் சிறுது நேரத்தில் மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக அறிவித்துவிட்டார்கள். அந்த அளவுக்கு அவர் வெறிபிடித்து வீடியோ கேம் விளையாடி இருக்கிறார்.

இந்தச் செய்தி இப்படிப்பட்டா கருத்துள்ளோருக்கு உதவிகரமாகவே அமையும்.

ஆனால், ஸ்டீபன் ஜான்சன் என்பவர் தான் எழுதிய புத்தகத்தில் வீடியோ கேம் தற்போதைய குழந்தைகளுக்கு அறிவு வளர உதவுகிறது என்று சொல்கிறார். குழந்தைகள் வீடியோ கேம் விளையாடும் பொழுது அவர்கள் மூளையின் பெரும்பாலான் பகுதிகள் வேலை செய்கின்றன. முப்பரிமணத்தில் படங்களைப் பார்க்கிறார்கள். கைகளுக்கும் மூளைக்குமான ஒருங்கிணைப்பு நன்கு வளர ஏதுவாகிறது.. குழந்தைகளின் தீர்வுகாணும் திறன் வெகுவாக வளருகிறது என்றவகையில் தன் கருத்துக்களைத் தெரிவிக்கிறார்.

வீடியோ கேம் விளையாட்டினால் குழந்தைகளுக்கு நடைமுறைவாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கும் திறன் அதிகரிக்கிறது என்றும் சொல்கிறார்.

என்னதான் இருந்தாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது உண்மைதானே!

டீவி:

டீவியில் தமிழ் சானல்களைப்பார்த்து வருடக்கணக்கான எனக்கு தமிழ் சானலை விமர்சிக்கும் தகுதி உண்டா என்பது கேள்வி. ஆனாலும் கேள்வியறிவில் கிடைத்த தகவல்களின்படி தமிழ் மக்களின் அறிவினை அப்படி ஒன்றும் வளர்ப்பதாக அமையவில்லை என்றே அறிகிறேன். சொல்லப்போனால் மக்களின் அறியாமையினையும், மூடநம்பிக்கையினையும் உபயோகப்படுத்தி அதனை இன்னும் மோசமாக்கும் வகையில்தான் அமைந்திருக்கிறது என்பதாகக் கருதுகிறேன்.

இது ஒருபுறமிருக்க, டீவி மக்களைச் சோம்பலாக உட்கார வைக்கிறது. அவர்கள் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் இல்லாமல் தேவையில்லா விஷயங்களைத் திணிக்கும் வண்ணம் உள்ளது. மூளைச்சலவை(brainwash) செய்கிறது. கண்களைக் கெடுக்கிறது. வன்முறை நிறைந்து இருக்கிறது. பாலியல் கவர்ச்சியினை பாழாய்ப் பயன்படுத்துகிறது. படிக்கும் நேரத்தைக் கொல்கிறது. நேரத்தை வீணடிக்கிறது. இது போன்ற கருத்துக்களும் நிலவுகின்றன.

இந்தக் கருத்தை முழுமையாக மறுக்கிறவனாக இல்லை என்றாலும், ஸ்டீபன் ஜான்சன் கருத்துக்களை இங்கே கொடுக்கிறேன். டீவி நிறையக் கருத்துக்களைக் கொடுக்கிறது. நல்ல பேச்சு நிகழ்ச்சிகள் மக்களுக்கு சிந்தனையினைத் தருவதாக அமைகிறது. மோசமான நிகழ்ச்சிகள் ஆங்காங்கே இருந்தாலும், நிகழ்ச்சிகள் பல பயனுள்ளதாக அமைந்துள்ளதோடு, பல தகவல்களைக் கொடுக்கும் நல்ல ஊடகமாக இருக்கிறது என்றும் சொல்கிறார். இன்றைய தலைமுறைக்கு, இன்றைய தகவல் யுகத்தில் தகவல்கள் கொண்டு சேர்க்கும் பணியினைச் சிறப்பாகச் செய்கிறது என்று சொல்லி பற்பல நல்ல அமெரிக்க நிகழ்ச்சிகளை மேற்கோள் காட்டுகிறார். ஆனால், அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் தமிழ் சானல்களில் உண்டா? எனக்கு உண்மையிலுமே தெரியாமல்தான் இக்கேள்வியினைக் கேட்கிறேன்.



டிவிடி, சினிமா, வலைதளம்:
இதுபற்றி பிறகு அலசுகிறேன்.

-நித்தில்

0 Comments:

Post a Comment

<< Home