எண்ணப்பின்னல்கள்

நண்பரே! எமது எண்ணப்பின்னல்களுக்கு தங்களை வரவேற்கிறேன். திருக்குறள் (Thirukural) விஷயங்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் - நித்தில்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Tuesday, August 30, 2005

கோவணக்கதை தொடர்ச்சி...

துறவில் பெண்கள் பற்றி வள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார் என்ற கேள்விக்கு பதில் தேடினோம். ஆண் பெண் என்ற் பாகுபாட்டினை எங்கும் வள்ளுவர் சொல்லியிருக்கவில்லை.

இன்னொரு நண்பர் சொன்னகதை.

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொற்பொழிவுகள் ஆற்றுவது, தியானம் செய்வது, பக்தர்களை சந்திப்பது போன்ற பல அலுவல்களுடன் இருப்பார். அந்த அலுவல்களுக்கிடையேயும் சமையலறைக்கு வந்து ‘அடுத்த சமையலுக்கு என்ன செய்யப்போகிறாய்? என்ன செய்திருக்கிறாய்? என்று தன் மனைவியிடம் கேட்டுச் செல்வாராம். இ தைப்பலமுறை கவனித்து வந்த அவரது மனைவி, 'நீங்கள்தான் துறவி ஆயிற்றே, பிறகு ஏன் உணவு விஷயத்தில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள்?’ என்று கேட்டாராம். அதற்கு அவர், “உயிருடன் இருப்பதற்கு ஏதாவது ஒரு விஷயத்திலாவது பற்று இருக்க வேண்டும். என்றைக்கு நான் இப்படி உணவு விஷயத்தில் ஆர்வம் காட்டமல் இருக்கிறேனோ அன்றே நான் அடுத்த நிலை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டேன் என்று பொருள்” என்று சொன்னாராம். பிற்காலத்தில் அவர் உணவு பற்றி ஆர்வம் காட்டாத நாளிலேயே அவரது மனைவி ராமகிருஷ்ணர் வீடுபேறு அடையத் தயாராகி விட்டார் என்று புரிந்து கொண்டாராம்.

-நித்தில்

0 Comments:

Post a Comment

<< Home