எண்ணப்பின்னல்கள்

நண்பரே! எமது எண்ணப்பின்னல்களுக்கு தங்களை வரவேற்கிறேன். திருக்குறள் (Thirukural) விஷயங்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் - நித்தில்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Sunday, October 23, 2005

இவைகளை மறக்காதீங்க! - அவைகளை மறந்துவிடுங்க!

மறக்காதீங்க! மறக்காதீங்க! மறக்காதீங்க!
இப்படி மறக்காதீங்க! என்று சிலவற்றையும்

மறந்து விடுங்க! மறந்து விடுங்க! மறந்து விடுங்க!
இப்படி மறந்து விடுங்க! என்று சிலவற்றையும் சில குறள்களில் வள்ளுவர் சொல்லியிருக்கிறார். அப்படி எவைகளைத்தான் சொல்கிறார்?

அந்தக்குறள்களையும் கவனிப்போம் வாங்க.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு. -204

பிறருக்குக் கேட்டைத்தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் நினைக்கக்கூடாது. அப்படி நினைத்தானேயானால், அவனுக்கு அறம் கேடு நினைக்கும்.

அறத்தினூங்கு ஆக்கம் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு. -32

ஒருவருக்கு அறத்தைவிட நன்மையானதும் இல்லை. அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கெடுதியானதும் இல்லை என்கிறார்.

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு. -106

குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்காதீங்க! துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விட்டு விடாதீங்க! என்கிறார்.. அதே அதிகாரத்தில் இன்னொரு குறளில்,

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. - 108.

ஒருவர் முன் செய்த நன்மையை மறப்பது அறம் ஆகாது. அவர் செய்த தீமையை செய்த அப்பொழுதே மறந்து விடுவது நல்லது என்கிறார். இப்படி தீமைகளை மறக்கச் சொன்னவர் இன்னும் சிலதையும் மறக்கச் சொல்கிறார்.

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று. - 152.

வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும். அத்தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்துவிடுதல் அதனினும் நல்லது என்கிறார். இன்னொரு குறளில்,

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும். - 303.

யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்துவிட வேண்டும். தீமையான வினைகள் அந்தச் சினத்தாலே ஏற்படும் என்கிறார்.

6 Comments:

  • At Saturday, October 29, 2005 2:45:00 AM, Blogger rnatesan said…

    dear,today thro' dinamalar i came tour page.it is very nice and interesting.
    though studied in schooldays but forgot everything .i am requesting our neigbhour children and perisugalaiyum to go thro your site.okm good effort.
    (how to write reply in tamil?)
    r.natesan

  • At Saturday, November 05, 2005 9:39:00 PM, Blogger முநி said…

    மிக்க நன்றிங்க. நீங்க இந்த பின்னூட்டம் எழுதிய பின்னர்தான் எனக்கே தினமலரில் இந்த வலைப்பூபற்றி எழுதப்பட்டது தெரிந்தது. வாஷிங்டன் வட்டாரப்பகுதியில் நடக்கும் திருக்குறள் இலக்கிய ஆய்வுக்கூட்டமும் அங்கு அன்பர்கள் குறள் மேல் கொண்டிருக்கும் பற்றும் குறள் பற்றி எழுதுவதற்கு வெகு உதவியாக இருக்கிறது.

    அன்புடன்
    நித்தில்

Post a Comment

<< Home