எண்ணப்பின்னல்கள்

நண்பரே! எமது எண்ணப்பின்னல்களுக்கு தங்களை வரவேற்கிறேன். திருக்குறள் (Thirukural) விஷயங்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் - நித்தில்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Saturday, November 05, 2005

புதிர் #1

lateral thinkingக்கு பக்கவாட்டுச் சிந்தனை என்ற மொழிபெயர்ப்பு சரியாக இருக்குமென்று நினைக்கிறேன். இப்படி பக்கவாட்டுச் சிந்தனைப் புதிர்கள் சிலவற்றை உங்களுக்குக் கொடுக்கலாம் என்று இருக்கிறேங்க. நம்ம ஊர் விடுகதைமாதிரிதான் இதுவும். உதாரணமாக இந்தக் கதையைப் பார்க்கலாங்க.

தீவிரப்பாதுகாப்புச் சிறையில் இருக்கும் கைதி ஒருவனுக்கு அவன் மனைவி கடிதம் அனுப்பியிருந்தாள்.
"அன்பே நான் இப்பொழுது தோட்டத்தில் கடலை பயிரிடலாம் என்று இருக்கிறேன்"

அதற்கு அந்த கைதி பதிலளிக்கையில்,
"அன்பே, இப்பொழுது பயிரிடாதே! ஏனென்றால், அங்குதான் நான் துப்பாக்கிகளைப் புதைத்து வைத்திருக்கிறேன்" என்றான்.

சிறிது காலம் சென்றபின் இன்னொரு கடிதம் அவன் மனைவியிடமிருந்து வந்தது. அதில்

"அன்பே, நிறைய போலீஸ்காரர்கள் நம் தோட்டத்தைத் தோண்டினார்கள். ஆனால், அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை" என்றிருந்தது.

அதற்கு, கைதி பதிலில்,

"அன்பே, இப்பொழுது நீ கடலை பயிரிடலாம்" என்றான்.

இங்கு இந்தக் கைதி பக்கவாட்டுச் சிந்தனையை உபயோகப்படுத்தி தனது தோட்டப்பிரச்சனைக்குத் தீர்வு கண்டான். இப்படி, சில புதிர்களைப் பார்க்கலாம் வாங்க.

புதிர் #1:

ஒரு எருது ஒரு நாள் முழுவது நடந்து கொண்டேயிருந்ததுங்க. கடைசியில் பார்த்தால், அதனுடைய இரண்டு கால்கள், 32 கிமீ நடந்து இருந்ததுங்க. ஆனால், மற்ற இரண்டு கால்களோ 30 கிமீ தான் நடந்து இருந்ததுங்க. இது எப்படிங்க?


துப்புகள்:

1. கடைசிவரை அந்த எருது உயிருடன்தான் இருந்ததுங்க.
2. அந்த எருது மற்ற எருதுகள் போல சாதாரணமானதுதாங்க. சிறப்பம்சங்கள் எதுவுமில்லைங்க.
3. அது வேலை செய்யும் எருதுங்க.

விடை தெரிந்தாலோ அல்லது மேலும் தகவல் வேண்டுமானாலோ பின்னூட்டமிடுங்க.

-நித்தில்

4 Comments:

  • At Saturday, November 05, 2005 4:51:00 PM, Anonymous Anonymous said…

    செக்கிழுக்கும் எருதா?

     
  • At Saturday, November 05, 2005 7:14:00 PM, Blogger முநி said…

    கலக்கிப்போட்டீங்க! :) அதுதாங்க விடை.

     
  • At Sunday, November 06, 2005 12:17:00 AM, Blogger பரஞ்சோதி said…

    கடலை நகைச்சுவை அருமை.

    புதிர்கள் கொடுக்கும் போது துப்புகள் கொடுக்கத் தேவையில்லை. அவ்வாறு கொடுப்பதால் விடை சொல்ல எளிதாகி விடுகிறது, இனிமேல் துப்புகள் கொடுக்காமல், விடை கொடுக்க கொடுக்க துப்புகள் கொடுத்தால், விடை காண நிறைய பேர் வருவார்கள்.

    தொடரட்டும் உங்கள் புதிர் பதிவுகள்.

     
  • At Sunday, November 06, 2005 8:50:00 AM, Blogger முநி said…

    நன்றி பரங்சோதி,
    நீங்கள் சொன்னபடியே துப்புகள் இல்லாமல்....

    -நித்தில்

     

Post a Comment

<< Home