புதிர் #2
இன்னொரு புதிரையும் பார்ப்போங்க...
இரண்டு மனிதர்கள் ஆஸ்திரேலியாவின் அடர்ந்த காட்டுக்குள் சென்றுகொண்டிருக்கும் போது உலகத்திலேயே உயர்ந்த மரத்தைப் பார்த்தாங்க. சுற்றிலும் எங்கு பார்த்தாலும் மரங்கள். அவர்கள் மரத்தின் உயரத்தை துல்லியமாக அளக்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் அவர்களிடம் எந்தவிதமான நவீன உயரமளக்கும் கருவிகளும் இல்லை. ஆனாலும் அவர்கள் அம்மரத்தின் உயரத்தை சரியாக அளந்துவிட்டார்கள். எப்படிங்க?
துப்புகள்:
1. அவர்கள் கோணங்களையோ, நிழலையோ உபயோகப்படுத்தவில்லை
2. அவர்கள் மரத்திலும் ஏறவில்லை
3. அவர்கள் கயிறையும், அளவுகோலையும் உபயோகப்படுத்தினார்கள்.

8 Comments:
At Saturday, November 05, 2005 8:53:00 PM,
dondu(#11168674346665545885) said…
மரம் கீழே விழுந்ததாக இருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
At Sunday, November 06, 2005 8:59:00 AM,
முநி said…
மற்றொரு துப்பு:
அந்த மரம் நேராக மற்ற மரங்களைப் போல நின்று கொண்டு இருந்தது.
-நித்தில்
At Sunday, November 06, 2005 10:13:00 AM,
பாலராஜன்கீதா said…
அளவுகோலை வளைஎறியாக (boomerang) உபயோகித்தார்களா? :-))
At Sunday, November 06, 2005 11:24:00 AM,
முநி said…
வளைஎறி உபயோகப்படுத்தவில்லைங்க.
At Sunday, November 06, 2005 1:14:00 PM,
dondu(#11168674346665545885) said…
"அவர்கள் மரத்திலும் ஏறவில்லை" அதாவது இந்த மரத்தில் ஏறவில்லை, ஆனால் பக்கத்தில் இருந்த மரதில் ஏறினார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
At Sunday, November 06, 2005 7:10:00 PM,
முநி said…
டோண்டு ராகவன்,
நீங்க முதல் தடவையிலேயே பதிலை நெருங்கி விட்டீங்க. பக்கவாட்டுச் சிந்தனைப் புதிர்களுக்கு பல விடைகள் கிடைக்க வாய்ப்பு உண்டு என்பது என் கருத்து. சரி விடைக்குப் போகலாம்.
அவர்கள் மரத்தை வெட்டிச் சாய்த்து பின்னர் மரத்தின் உயரத்தை (நீளத்தை) அளந்தார்கள்.
தங்கள் வருகைக்கு நன்றி!
அன்புடன்,
நித்தில்
At Monday, November 07, 2005 5:13:00 AM,
பாலராஜன்கீதா said…
// 3. அவர்கள் கயிறையும், அளவுகோலையும் உபயோகப்படுத்தினார்கள். //
// அவர்கள் மரத்தை வெட்டிச் சாய்த்து பின்னர் மரத்தின் உயரத்தை (நீளத்தை) அளந்தார்கள்.//
நல்லா அளக்கறா(றீ)ங்க :-))
At Monday, November 07, 2005 7:50:00 AM,
முநி said…
இது பக்கவாட்டு சிந்தனை புதிருங்க. நான் கொடுத்தது க்ளூக்கள் மட்டும்தான்.
//
ஆனால் அவர்களிடம் எந்தவிதமான நவீன உயரமளக்கும் கருவிகளும் இல்லை.
//
என்று மட்டும்தான் புதிரில் உள்ளது.
:)
-நித்தில்
Post a Comment
<< Home